FEST Festival விழா - சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை வென்ற கொட்டுக்காளி!
'கொட்டுக்காளி' திரைப்படம் FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை வென்றுள்ளது.
‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்று அசத்தியது. முன்னதாக, இந்த திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது.
இந்த நிலையில், போர்ச்சுக்கலில் நடைபெற்ற புதிய படங்கள், இயக்குநர்களுக்கான 20வது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துளளார்.
Excited to share that #Kottukkaali has been awarded the 'GOLDEN LYNX AWARD' for 'BEST FEATURE FILM' at the 20th FEST - New Directors/New Films International Film Festival (@FESTFestival), Espinho, Portugal 🥳@Siva_Kartikeyan @KalaiArasu_ @sooriofficial @PsVinothraj… pic.twitter.com/BOZ546KKGE
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 1, 2024