Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஃபெஞ்சல் பாதிப்பு - விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய குழு ஆய்வு!

11:33 AM Dec 07, 2024 IST | Web Editor
Advertisement

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக, மத்திய அரசு ரூ.2000 கோடி வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனையடுத்து பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடுக்கு மத்திய அரசு ரூ.944.80 கோடியை வழங்கியுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று தமிழ்நாடு விரைந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி அருகேயுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது. ஃபெஞ்சல் புயலால் அடித்து செல்லப்பட்டு, பாதிக்கப்பட்டு இருந்த நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட பல்வேறு தானிய பொருட்களை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது மத்திய உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவுடன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, எஸ்பி தீபக் சிவாஜ் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.

Tags :
Central teamCycloneFengalVillupuram
Advertisement
Next Article