#FengalCyclone உருவாவதில் தாமதம் - 3 கிமீ வேகத்தில் மிக மிக மெதுவாக நகர்வதாக தகவல்!
ஃபெங்கால் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 3 கி.மீ ஆக குறைந்துள்ளதால் புயல் சின்னம் சென்னையில் இருந்து 500 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காண்போம்.
ரெட் அலர்ட்
கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
அத்துடன் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.