For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!

06:51 PM Feb 26, 2024 IST | Web Editor
டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு   தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்
Advertisement

விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

Advertisement

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்ய வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் எல்லைகளிலேயே போலீசார் தடுத்து வைத்தனர்.

தொடர்ந்து பஞ்சாப் - அரியானா எல்லையில் கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசியதில், ரப்பர்குண்டு பாய்ந்து சுப்கரண்சிங் என்ற 21 வயது இளம் விவசாயி உயிரிழந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக விவசாயிகள் நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் இன்று மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாலையில் இருந்தே வாகனஓட்டிகள் அப்பகுதியில் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து ஹந்திபூர் முதல் ஃபலைடா வரை யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் பேரணியைத் தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில்லா, டிஎன்டி எல்லைகள், ஃபிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. லுஹர்லி டோல் பிளாசா, மகாமாயா மேம்பாலம், யமுனா விரைவுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :
Advertisement