For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஃபகத் ஃபாசில் பிறந்தநாள் - போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘புஷ்பா 2’ படக்குழு!

06:21 PM Aug 08, 2024 IST | Web Editor
ஃபகத் ஃபாசில் பிறந்தநாள்   போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘புஷ்பா 2’ படக்குழு
Advertisement

நடிகர் ஃபகத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisement

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. மேலும், ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தை ஆகஸ்டு மாதம் 15ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஃபகத் ஃபாசில் புஷ்பா திரைப்படத்தில் பன்வர் சிங் ஷேகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும் மற்றொரு கையில் துப்பாகியுடன் மிகவும் மாஸான லுக்கில் காணப்படுகிறார்.

Tags :
Advertisement