பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதி!
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்காக, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான ஹுசைனுக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் இருந்ததாகவும், கடந்த ஒரு வாரமாக இதயம் தொடர்பான பிரச்சனைக்காக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரபல புல்லாங்குழல் கலைஞரும், ஜாகிர் உசேனின் நெருங்கிய நண்பருமான ராகேஷ் சௌராசியா, “அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இப்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து கவலையில் உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஜாகிர் உசைன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். உலகப்புகழ் பெற்ற இவர் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.