மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் தோல்வியை தழுவிய சினிமா நட்சத்திரங்கள்!
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல சினிமா நட்சத்திரங்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
இந்நிலையில்,தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சில சினிமா பிரபலங்களும் போட்டியிட்டனர். விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா களம் இறங்கினார் இவர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியை தழுவினார்.கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திடம் தோல்வியை தழுவினார்.
இதையும் படியுங்கள் : வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? அயர்லாந்துடன் இன்று மோதல்!
விழுப்புரம் (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திரைப்பட இயக்குநர் களஞ்சியம் போட்டியிட்டார். இவர் விசிக வேட்பாளர் ரவிக் குமாரிடம் தோல்வியை தழுவினார். அதேபோல வேலூர் தொகுதியில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட்ட நிலையில் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். திரையுலகில் வெற்றி பெற்ற இவர்களால் தேர்தல் களத்தில் வெற்றி முடியவில்லை.