For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கார் விபத்தில் பிரபல அமெரிக்க பாடகி உயிரிழப்பு!

கார் விபத்தில் பிரபல அமெரிக்க பாடகி ஆங்கி ஸ்டோன் உயிரிழந்தார்.
07:09 AM Mar 03, 2025 IST | Web Editor
கார் விபத்தில் பிரபல அமெரிக்க பாடகி உயிரிழப்பு
Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகி ஆங்கி ஸ்டோன் (63). இவர் நோ மோர் ரெயின், மோர் தான் ய வுமன் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இதற்காக சிறந்த பாடகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதுக்கு இவரது பெயர் 3 முறை பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் அலபாமா மாகாணத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியை முடித்து விட்டு அவர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

Advertisement

மாண்ட்கோமரி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அவரின் கார் மீது ஒரு சரக்கு வாகனம் மோதியது. இதில் அந்த கார் அப்பளம்போல நொறுங்கியது. அருகில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விபத்தில் ஆங்கி ஸ்டோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், சரக்கு வாகனத்தில் பயணித்த 7 பேரும் உயிர்தப்பினர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக ஏதும் தெரியவில்லை. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆங்கி ஸ்டோனின் மறைவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement