புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தவறான செய்தி - OPINDIA நிறுவனத்தின் மீதான வழக்கு ரத்து!
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தியை வெளியிட்ட OPINDIA இணையதள செய்தி நிறுவன ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
04:48 PM Mar 05, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்கள் வதந்தி பரவியது. மேலும் இது தொடர்பாக OPINDIA இணைய தளத்தில் செய்திகள் வெளியானது. இது தவறான செய்தி என்று திமுக நிர்வாகி ஒருவர் புகார் அளித்திருந்தார்.
Advertisement
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இணையதளத்தின் ஆசிரியர் நுபூர் ஷர்மா மற்றும் முதன்மை செயல் அதிகாரி ராகுல் ரோஷன் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இணையதள ஆசிரியர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று(மார்ச்.05) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.