For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சரிவை சந்தித்து வரும் பூக்களின் விலை - குப்பையில் கொட்டப்படும் அவலம்!

07:15 AM Feb 04, 2024 IST | Web Editor
சரிவை சந்தித்து வரும் பூக்களின் விலை   குப்பையில் கொட்டப்படும் அவலம்
Advertisement

பூக்களின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால்  குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பூக்களின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால்  குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். சரியான விற்பனை இல்லாததால் தினந்தோறும் 10-டன் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் பூக்கடைகள் நிரந்தரமாக மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

  • மல்லி கடந்த வாரம் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 700 ரூபாய் குறைந்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
  • சம்பங்கி பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
  • பன்னீர் ரோஸ் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாய் குறைந்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
  • அரளிப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 குறைந்து 30 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
  • கனகாம்பரம் 900 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 200 குறைந்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
  • சாமந்திப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாய் குறைந்து 20 விற்பனை செய்யப்பட்டு வருகிறது
  • சாதி மல்லி 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 100 குறைந்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • சாக்லேட் ரோஸ் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 20 குறைந்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

பல்வேறு மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து சற்று மந்த நிலையிலேயே உள்ளது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதன் எதிரொலியாக பொங்கல் பண்டிகையில் இருந்தே பொதுமக்களின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

நாளுக்கு நாள் பூக்களின் விற்பனை மந்தமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் விற்பனை ஆகாத பூக்களை தினமும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படுகிறது. பூக்களின் விற்பனை இது போன்று தொடர்ந்தால் பூ விற்பனையாளர்களின் வாழ்வதாரம் கேள்விக்குறியாகும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement