திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது!
திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலையை நடித்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (எ) மாதேஸ்வரன், விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து இதில் தொடர்புடையவர்கள் யார் யார்? இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையிலான போலீசார் தீவிர
விசாரணை மேற்கொண்டனர். மாதேஷ் (எ) மாதேஸ்வரன் திருச்செங்கோடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து, மத்திய பகுதிகளில் உள்ள 13 மதுபான கடைகளுக்கு இரவு நேர விற்பனைக்காக மது விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.