Fair Delimitation டி-ஷர்ட் அணிந்த விவகாரம் - தமிழ்நாடு எம்.பி.-கள் சஸ்பெண்ட்?
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்று நாடாளுமன்ற ஒரு அவைகள் இன்று(மார்ச்.20) கூடியது. அப்போது இரு அவைகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ' #FairDelimitation தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட வெள்ளை டி-ஷர்ட்களை அணிந்து வந்தனர்.
இதனால் மக்களவை பிற்பகல் 2 மணிக்கு அவைத்தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் அவையின் நடைமுறை விதிகளுக்கு எதிரானது. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், கண்ணியமற்ற உடை அவைக்குள் ஏற்றுக்கொள்ளப்படாது. வெளியே சென்று, உங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு, சரியான உடையுடன் திரும்பி வாருங்கள் என்று நாடாளுமன்ற விதிகளை மேற்கோள் காட்டி உறுப்பினர்களிடம் கூறி நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் எம்பிக்கள் அதே உடையில் மீண்டும் திரும்பியதைக் கண்டித்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநிலங்களவையில்10 திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, எம். சன்முகம், கே. ஆர். ராஜேஷ்குமார், எஸ். கல்யாணசுண்டரம், அந்தியூர் பி. செல்வராசு, பி. வில்சன், ஆர். கிரிராஜன், எம். முகமது அப்துல்லா, என்.ஆர். இலங்கோ, கனிமொழி என்.வி.என். சோமு ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, அவையின் விதிகளை மீறும் வகையில் உடைகளை அணிந்து வந்து அவை மரபை மீறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்வது குறித்து நாளை(மார்ச்21) காலை முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையின் அவைக் குறிப்பில் உறுப்பினர்கள் பெயர் எதுவும் தற்போது வரை இடம்பெறவில்லை