தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்தில் வெடிப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (ஜன.4) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு பணிப்புரிந்து வந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது வருகிறது. படுகாயம் அடைந்த நபர் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடி பொருள்களை உற்பத்தி செய்யும்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் மெக்னீசியம் போன்ற தாது பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
நிர்வாகம் ஏதேனும் அலட்சியப்போக்குடன் செயல்பட்டது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர். போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.