For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#FactCheck | உ.பி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் கர்ப்பமானதாக பரவிய செய்தி - எழுத்தரின் அலட்சியத்தால் தவறான தகவல் பரவியதாக விளக்கம்!

09:43 PM Nov 17, 2024 IST | Web Editor
 factcheck   உ பி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட திருமணமாகாத  பெண்கள் கர்ப்பமானதாக பரவிய செய்தி   எழுத்தரின் அலட்சியத்தால் தவறான தகவல் பரவியதாக விளக்கம்
Advertisement

This News Fact Checked by ‘Factly’

Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட திருமணமாகாத இளம்பெண்கள் கர்ப்பமாகியதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பு விவரத்தை விரிவாக காணலாம்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் கர்ப்பமாகி விட்டதாக  ஏபிபி நியூஸ் லோகோவைக் கொண்ட பதிவுகள் ப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய பேக்ட்லி உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகளில் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலுக்கு உட்படுத்தினோம். இந்த தேடலின் முடிவில் ABP செய்திகள் மற்றும் பிற ஊடகங்களில் வெளியான செய்திகளின் அறிக்கைகளுக்கு அழைத்துச் சென்றது. இதன்படி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ராம்னா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்தது. இந்த செய்தியின்படி தீபாவளி பண்டிகையின் போது, ​​இந்த கிராமத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்  ஊட்டச்சத்து கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்களாகப் பதிவு செய்யப்பட்டதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த செய்தி பெண்களும் அவர்களது குடும்பத்தினரையும் கவலையடையச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தை வாரணாசியின் தலைமை வளர்ச்சி அதிகாரிக்கு (சிடிஓ) தெரிவித்தனர்.  இந்த பிரச்சினையை குறித்து உரையாற்றிய அவர் திருமணமாகாத பெண்களை கர்ப்பமானவராக பதிவு செய்தது தவறுதலாக நடந்ததாக ஒப்புக்கொண்டார். வாக்காளர் பட்டியலை பதிவு செய்யும் பூத் லெவல் அலுவலராக (பிஎல்ஓ) பணியாற்றும் அவர் உள்ளூர் அங்கன்வாடி பணியாளராகவும் உள்ளார். எனவே வாக்காளர் பதிவு மற்றும் சத்துணவு கண்காணிப்பு திட்டத்திற்கான படிவங்களை தவறுதலாக மாற்றி பதிவு செய்துவிட்டதாக அவர் விளக்கமளித்தார்.

மேலும் அக்கிராமவாசிகளின் புகார்களைத் தொடர்ந்து, அந்த பதிவேட்டில் உள்ள பிழைகள் சரி செய்யப்பட்டதாகவும் , தவறான தரவுகள் போர்ட்டலில் இருந்து அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக வாரணாசியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து துறையின் மாவட்ட திட்ட அலுவலர் (டிபிஓ)  டி.கே.சிங்கை உண்மையில் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியரின் சம்பளம் ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முடிவு :

வாரணாசியில் திருமணமாகாத 35 பெண்கள் கர்ப்பமாக இருப்பதாக பரவும் தகவல்கள் தவறானது அங்கன்வாடி எழுத்தரின் பிழை காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து அவை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement