For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய Facebook - 2016 அமெரிக்க தேர்தலும் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா மீதான குற்றச்சாட்டுகளும்!

10:02 PM Apr 29, 2024 IST | Web Editor
பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய facebook   2016 அமெரிக்க தேர்தலும் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா மீதான குற்றச்சாட்டுகளும்
Advertisement

 2016 அமெரிக்க தேர்தலில் பேஸ்புக் பயனர்களின் தரவுகளை தவறாக பயன் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா மீதான குற்றச்சாட்டுகளும் குறித்து விரிவாக காணலாம்

Advertisement

நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளிலுக்கும்,  இதனைத் தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

  தொழில்நுட்பங்கள் வந்த போதே அவை தேர்தல்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்தன. அதன்படி முதல் இணையதள போஸ்டர் பயன்படுத்தப்பட்ட தேர்தல் முதல் Social Media Election வரை கடந்த தொடரில் பார்த்தோம். இந்த நிலையில் 2016ம் ஆண்டு அமெரிக்க தேர்தல் ஏன் Facebook Election என அழைக்கப்பட்டது என விரிவாக பார்க்கலாம்.

2016 அமெரிக்க தேர்தலும் கேம்பிரிட்ஜ் அனால்டிகாவின் சர்ச்சையும்..

2016 அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும், முன்னாள் வெளியுறவுத் துறை செயலரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஹிலாரி க்ளிண்டனுக்கும் இடையே நடைபெற்றது. 1996 தேர்தல் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் மிக கச்சிதமாக உள்வாங்கிக் கொண்ட அமெரிக்க தேர்தல் 2016 தேர்தலிலும் அதனை பிரதிபலித்தது.

2012 அமெரிக்க தேர்தலில் அதிபராக 2வது முறை பாரக் ஒபாமா வெற்றிபெற்றபோது கூட அப்போது பிரபலமாகியிருந்த கூகுள், பேஸ்புக் , யூடியூப் போன்ற வலைதளங்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்தார். அதன்பின்னர் பேஸ்புக் நிறுவனம் தேர்தல் தொடர்பான நிறைய அப்டேட்டட் டூல்களை பேஸ்புக்கில் இணைத்தது. தேர்தல் பிரச்சாரம், கருத்துக் கணிப்புகள், லைவ் ஸ்ட்ரீம்கள் என புதிய தொழில்நுட்பங்களுடன் தேர்தலுக்கு பயன்படும்படியாக தங்களது தளத்தை அவை வடிவமைத்தது. இதேபோலத்தான் 2016 தேர்தலிலும் பேஸ்புக் புதிய டூல்களை அறிமுகம் செய்தது.

அம்பலமான கேம்ப்ரிட்ஜ் அனால்டிகா ஊழல்:

2016 அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு இணையதள பிரச்சாரங்களை மேற்கொள்ளவும், தரவுகளை பயன்படுத்தி தேர்தல் வியூகங்களை வகுக்கவும் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா நிறுவனம் செயல்பட்டது. இதற்காக கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா நிறுவனத்துடன் இணைந்து இந்த பிரச்சாரங்களை செய்தது.

இதன்படி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனர்களின் தரவை அவர்களின் அனுமதியின்றி எடுத்துக் கொண்டது. இந்த நிறுவனத்திற்கு டொனால்ட் டிரம்ப் மற்றும் டெட் க்ரூஸ் ஆகியோர் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்துள்ளனர்.

பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தரவுகளை பெற்று பயனர்களை மூன்று பிரிவுகளாக பிரித்தனர். அதன்படி ட்ரம்புக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள், நடுநிலையாளர்கள் என மூன்று தரப்பினருக்கும் அவர்களை கவருவதற்கான பிரச்சாரங்களை கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா செய்தது. இதற்காக பேஸ்புக்கில் பயனர்களின் சுயவிவரங்களை அவர்களின் அனுமதியின்றி கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா திருடியுள்ளது.

உதாரணமாக ஒரு பயனர் பேஸ்புக்கை ஸ்க்ரோல் செய்யும்போது அவரின் கண்களுக்கு ட்ரம்புக்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஒரு போஸ்ட்ர் படுகிறது எனில் அதற்கு அந்த பயனர் அளிக்கும் முகபாவணைகளை மொபைல் அல்லது கணினி கேமராக்கள் பதிவு செய்தது அதனை டேட்டாவாக மாற்றி வழங்கும். அதற்கு ஏற்றவாறு பயனர்களுக்கு ட்ரம்புக்கு ஆதரவான பிரச்சாரம் சென்றடையும்.

கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனத்திலிருந்து வெளியேறிய கிறிஸ்டோபர் வேலி இதனை அம்பலப்படுத்தியுள்ளார். அதன்படி இந்த நிறுவனம் சராசரி குடிமக்களை விட மனக்கிளர்ச்சி,  கோபம் அல்லது சதிச் சிந்தனைக்கு அதிக வாய்ப்புள்ள பேஸ்புக்  பயனர்களை தேர்வு செய்து அவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது.  இவர்கள் மூலமாக ஃபேஸ்புக் போஸ்ட்கள், விளம்பரங்கள், கட்டுரைகளைப் பகிர்வது போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தியது. மேலும்  அல்லது இந்த பயனர்களை கொண்டு  "ஐ லவ் மை கன்ட்ரி" போன்ற போலி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கியது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 30 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் சுய விவரங்களை திருடியதாக தகவல் வெளியானது.  பேஸ்புக்கிடம் 87 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுகள் இருப்பதாக தெரிவித்தது.  அவர்களில் 70.6 மில்லியன் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட பேஸ்புக் :

கிறிஸ்டோபர் வேலி பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இந்த ஊழல் அம்பலமானதால் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேஸ்புக் முதலில் மன்னிப்பு கேட்டது. பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்க காங்கிரஸ் செனேட்டர்ஸ் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதனைத் தொடர்ந்து  ஜூலை 2019 இல், பேஸ்புக் அதன் தனியுரிமை மீறல்கள் காரணமாக ஃபெடரல் டிரேட் கமிஷனால் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  அக்டோபர் 2019 இல், பேஸ்புக் அதன் பயனர்களின் தரவை தவறாக பயன்படுத்தியதற்காக  இங்கிலாந்து தகவல் ஆணையர் அலுவலகத்திற்கு 500,000  யூரோ அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டது.

  • அகமது AQ
Tags :
Advertisement