For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திடநம்பிக்கையோடும், பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்" - விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
09:50 AM Mar 03, 2025 IST | Web Editor
 திடநம்பிக்கையோடும்  பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்    விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து
Advertisement

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

7ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

இதேபோல், புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வினை 86 தனியார் பள்ளியை சேர்ந்த 6 ஆயிரத்து 992 மாணவர்களும், 362 தனி தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"இன்று முதல் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன். விரும்பும் உயர்கல்வியைப் பெறுவதற்கேற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement