For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆஸ்கருக்குத் தேர்வானது “ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்” திரைப்படம்!

07:04 PM Dec 19, 2023 IST | Web Editor
ஆஸ்கருக்குத் தேர்வானது “ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்” திரைப்படம்
Advertisement

ஆஸ்கர் விருதுக்கான ‘சிறந்த அசல் பாடல்’ பிரிவில் மலையாள படமான ‘தி ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லஸ்’ (The Face of the Faceless) தகுதிச்சுற்று பட்டியலில் தேர்வாகியுள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவின் போட்டிக்கு மலையாள படமான ‘2018’ அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு (The Film Federation of India) அறிவித்திருந்தது.

'ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்' திரைப்படம் வின்.சி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியானது. இந்த திரைப்படம் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகை வின்சி அலோசியஸ் நாயகியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: தளபதி 68 டைட்டில் இதுவா?…வெளியான புதிய தகவல்!

இந்நிலையில், இப்படம் சிறந்த பாடல் பிரிவில் 2024 ஆஸ்கர் விருதுக்கான தகுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  கடந்த நவ.17-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை படத்தில் நடித்த வின்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஷைசன் பி ஓசெப் (Shaison P Ouseph) இயக்கியுள்ளார். அல்ஃபோன்ஸ் ஜோசஃப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement