ஒரே மாதத்தில் வெப்ப அலைக்கு 46 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் வெப்ப அலையின் காரணமாக கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டெல்லி உட்பட வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வெப்ப அலை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் தொடர்பான தரவுகளை மத்திய அரசு சேகரித்தது.
இதையும் படியுங்கள் : சுப்மன் கில்லுடன் திருமணமா? விளக்கம் கொடுத்த நடிகை ரித்திமா!
அதன்படி, கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக 24,849 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மே மாதத்தில் மட்டும் 19,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.