Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடும் வெப்பம் எதிரொலி - குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!

09:25 AM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

Advertisement

குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள ‘ஹராமி நல்லா' சிற்றோடை பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். எல்லைப் பகுதி என்பதால் இந்தப் பகுதியில் வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அனல் காற்றும் வீசி வருகிறது. இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி, ஒரு CRPF அதிகாரி ஆகியோர் நேற்று முன்தினம் கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தனர்.

இதையும் படியுங்கள் : விடுமுறை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அதிகாலை முதலே குவிந்துவரும் மக்கள்!

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு பூஜ் பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருவருக்கும் வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தனர் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் உதவி கமாண்டண்ட் விஸ்வதேவ், ஹெட் கான்ஸ்டபிள் தயாள் ராம் என தெரியவந்துள்ளது. இதில், விஸ்வதேவ் எல்லை பாதுகாப்புப்படையின் 59-வது பட்டாலியனை சேர்ந்தவர் ஆவார்.

Tags :
Borderdeathextreme heatGuardsGujaratHeat
Advertisement
Next Article