Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெங்களூருவில் தனியார் பள்ளி அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

03:24 PM Mar 19, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூருவில் தனியார் பள்ளி அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

பெங்களூருவின் சர்ஜாபூர் பிரதான சாலைக்கு அருகில் உள்ள ஒரு உள்ளூர் தனியார் பள்ளி வளாகத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் போன்ற வெடிப்பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  பள்ளி வளாகத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் இருந்த டிராக்டரில் இந்த வெடிகுண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்த டிராக்டர் வெடிப்பொருட்களை எடுத்து செல்ல பயனப்டுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  ஒரு கட்டுமான தளத்தில் பாறைகளை வெடிக்கச் செய்ய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இது மேலும் கவலைகளை அதிகரித்துள்ளன. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெல்லந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள ஒரு பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BangaloreBombExplosivePoliceprivate schoolSchool
Advertisement
Next Article