For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!

தேர்வுகளில் சர்ச்சையான கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
11:08 AM Jul 12, 2025 IST | Web Editor
தேர்வுகளில் சர்ச்சையான கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும்   டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி
Advertisement

டிஎன்பிஎஸ்சி குருப் 4 எழுத்து தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 311 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

Advertisement

தமிழகம் முழுவதும் 13,89,738 தேர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 9.30 மணி முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும். 100 கேள்விகள் தமிழ் கேள்வி என மொத்தம் 200 கேள்விகள் இருக்கும். மற்ற தேர்வுகளுக்கு பல கட்டங்களில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை கிடைக்கும். ஆனால் இந்த தேர்வு சிங்கிள் ஸ்டேஜில் நடக்கும். அதனால் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் வேலை கிடைக்கும்.

3,935 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன கண்காணிப்பாளர் என 25 போஸ்டர்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எல்லாம் இந்த தேர்வு எழுதலாம் என்பதால் நிறைய பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். 215 கிராம நிர்வாக அலுவலர் 1,678 இளநிலை உதவியாளர்1,100 தட்டச்சர், ஸ்டேனோ டைப்பிஸ்ட் 368, junior revenue inspector 239, forest watcher 145, forest guard 112 என தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற பிறகு merit and reservation அடிப்படையில் அழைக்கப்படுவார்கள்.

கடந்தாண்டு தேர்வு முடிவு வெளியாக நான்கு முதல் நான்கரை மாதம் ஆனது. ஆனால் இந்த ஆண்டு சில விஷயங்கள் எளிமையாக்கப்பட்டதால் மூன்று மாதத்திற்குள் முடிவு வெளியாகும். குரூப் 2 தேர்வு 2 1/2 லட்சம் பேர் எழுதியதால் அதனை இரண்டு மாதத்தில் வெளியிடுவதாக சொன்னோம். ஆனால் குரூப்-4 தேர்வை ஏறத்தாழ 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அதனால் முடிவுகள் வழியாக சிறிது நேரம் ஆகும். அதிகபட்சமாக மூன்று மாதங்களில் முடிவுகள் வெளியாகும். அதற்கு முன்பும் கூட வெளியாக வாய்ப்புள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் கடந்தாண்டு 10,721 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,027 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4,300 பேர் தேர்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக சுமார் 10,000 பேர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குரூப் 2 2a தேர்வுக்கான அறிவிப்பு வரும் வாரம் 15 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் இந்த ஆண்டு அட்டவணையை படி தேர்வுகளை நடத்தி விட்டோம். குரூப் 2 ஏ தேர்வு அறிவிப்பு வெளியிட்டவுடன் நடைபெறும்.
OMR பேப்பரை திருத்துவதற்கு 6 evolution lab வைத்துள்ளோம். இந்த பேப்பரை கம்ப்யூட்டர் தான் திருத்தப் போகிறது. மாறுபட்ட பதில்கள் இருந்தால் தேர்வர்கள் அதனை கோரலாம். பேப்பர் ஒரு மாதத்திற்குள் திருத்தப்படும். ஆனால் முடிவு வெளியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். பேப்பர் ஒரு மாதத்தில் திருத்தப்பட்டாலும் ரிசர்வேஷன் முறைப்படி ரேங்கிங் போட்டு கவுன்சிலிங் அழைக்க வேண்டும். எனவே முடிவுகள் வழியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். OMR simplified செய்ததால் திருத்துவதற்கு எளிமையாக இருக்கும்.

கடந்த ஆண்டுகளில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. தற்பொழுது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதனால் தான் இந்த எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்கள் வரை எந்த துறையில் காலி பணியிடங்கள் வந்தாலும் அதையும் சேர்த்துக் கொண்டு, இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை கொண்டு நிரப்புவோம்.

தற்காலிக பணியிடங்களை அந்தந்த துறை சார்பில் அவர்கள் நிரப்பி கொள்வார்கள். ஆனால் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பணியாளர்களை தேர்வுசெய்வார்கள். ஏ 4 சீட்டு கொண்டு சரி செய்யப்பட்டு வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, மத்திய இடத்திலிருந்து மாவட்ட தலைநகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வினாத்தாள்கள் சீல் வைக்கப்பட்ட வாகனங்களில் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கொண்டு சென்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படுகிறது வினாத்தாள் இருக்கும் ஒவ்வொரு பண்டிலும் சீல் வைக்கப்பட்டிருக்கும்.

தேர்வு அறைக்கு சென்ற பிறகுதான் அந்த சீல் திறக்கப்படும் வட்டாட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் இதை உறுதிபடுத்துவார்கள். தேர்வுகள் தாலுகா அளவில் நடக்கிறது. மூடப்பட்ட வாகனத்தில் போலீசார், டிஎன்பிஎஸ்சி அலுவலர், வருவாய் அலுவலர்கள் பொறுப்பில் பாதுகாப்பாக எடுத்துச் செல்வார்கள். மதுரையில் பேப்பர் ஒட்டியதால் சர்ச்சையாகிவிட்டது. ஆனால் முறைப்படி எல்லா இடங்களிலும் பாதுகாப்பாக வினாத்தாள்கள் சென்றுள்ளது.

தேர்வுகளுக்கு தயார் செய்யப்படும் வினாக்களை யாராலும் பார்க்க முடியாது. அதை தயாரிக்கும் குழு மட்டும்தான் பார்க்க முடியும். சர்ச்சைக்குள்ளாகும் கேள்விகள், அரசியல் கேள்விகள் போன்ற கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுக்களுக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறோம். அதையும் மீறி ஒரு சிலர் அந்த கேள்விகளை கேட்கும் பொழுது தர்ம சங்கடம் ஆகிவிடுகிறது.

சர்ச்சைக்கு உள்ளாகும் கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம். அப்படி யாராவது சர்ச்சைக்கு உள்ளாகும் கேள்விகளை எடுத்தார்கள் என்றால் அவர்களை கேள்விகள் தயாரிக்கும் குழுவில் இருந்து நீக்கி விடுவோம்" என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement