For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்!

11:11 AM Feb 28, 2024 IST | Web Editor
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி   சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார். இதனையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்க கோரி ஜாமின் மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

செந்தில் பாலாஜி 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருகிறார். தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது.

இதுவரை செந்தில் பாலாஜிக்கு 22 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளளது. இந்நிலையில் மார்ச் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, அவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பிப்ரவரி 14, 15, 21 தேதிகளில் நடைபெற்றது. விசாரணயின்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜாமின் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-ஆவது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் செந்தில் பாலாஜி மீதான வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags :
Advertisement