“கட்சியில் அனைவரும் ஒருமித்த கருத்துடனே செயல்படுகிறோம்” - அண்ணாமலை!
திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
கட்சியில் அனைவரும் சகோதர, சகோதரிகள்தான். வானதி ஸ்ரீனிவாசனாக இருக்கட்டும், நயினார் நாகேந்திரனாக இருக்கட்டும், அனைவருக்கும் பாஜகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே நோக்கம். ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம். பெயரை விட்டு ட்வீட் செய்வதை பெரிது படுத்த விரும்பவில்லை.
திமுக என்றாலே நாடக கம்பெனி. வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ, வீடியோ வெளியே வருகிறது. இது திமுக எழுதியுள்ள கதை ,வசனம். உண்மையாகவும், வெளிப்படையாகவும் திமுக உள்ள நிலையில் ஏன் சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும்?. கூட்டணி கட்சிகளே இதனை ஒப்புக்கொள்ளவில்லை” என்றார்.
நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கருத்துக்கு, நயினார் நாகேந்திரனுக்கு ரெய்டு விட அதிகாரம் இல்லை என பதில் அளித்தார்.