Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நீங்கள் #INDIA-வுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு செல்லும்” - #RahulGandhi

11:44 AM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

“நீங்கள் இந்தியாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் பிரமை உடைத்து ஜம்மு காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு செல்லும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அன்றைய தினம் (செப்டம்பர் 18) 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜம்மு பகுதியில், ரியாசி, ரஜெளரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களிலும் , காஷ்மீா் பகுதியில், ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய மாவட்டங்களிலும் உள்ள 26 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

காலை 9 மணி வரையிலான நிலவரப்படி 10.22% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இன்றைய தேர்தலில் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 25 லட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3,502 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரையில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்நிலையில், "ஜம்மு-காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, அதிக எண்ணிக்கையில் வந்து உங்கள் உரிமைகள், மற்றும் செழிப்புக்காக வாக்களியுங்கள் - 'இந்தியா'வுக்கு வாக்களியுங்கள். நீங்கள் இந்தியாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் பிரமை உடைத்து ஜம்மு காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு செல்லும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

https://twitter.com/RahulGandhi/status/1838786649574052208

இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஷ்மீரின் 3 மாவட்டங்களில் உள்ள 15 இடங்களுக்கும், ஜம்முவில் உள்ள 3 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 239 வேட்பாளர்களின் தலைவிதியை ஜம்மு காஷ்மீர் மக்கள் தீர்மானிப்பார்கள். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ம் தேதி வெளியாகும்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குபதிவில் மொத்தம் 61.38 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று 26 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று 3ஆம் கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முடிவுகள் வரும் அக்டோபர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags :
assembly electionsBJPCongressJammu and KashmirVOTING
Advertisement
Next Article