For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை" - திருமாவளவன் எம்.பி. வேதனை!

4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கூட அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். 
01:23 PM Mar 02, 2025 IST | Web Editor
 4 எம் எல் ஏ க்கள்  2 எம் பி க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை    திருமாவளவன் எம் பி  வேதனை
Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டார். அதில், திருமாவளவன் பேசியதாவது,

Advertisement

"ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்திய அரசமைப்பு முழுமையாக நடைமுறைக்கு வந்தால் இந்தியா சமத்துவ தேசமாகியிருக்கும்.

அரசியல் அதிகாரத்தில் இருப்பவருடன் இணைந்து தனக்கான உரிமையைப் பெறுவது சிறந்த நடைமுறை. 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கூட அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டங்களை பேசுவார்கள். பேனர் வைத்தால் அதை அகற்றிவிடுவார்கள். இதனால் அரசியல் ரீதியாக வலிமை அடைய வேண்டிய தேவை இருக்கிறது. இது போதாது என்ற போதாமையை காட்டுகிறது"

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement