Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறார் விஜயகாந்த்" - எடப்பாடி பழனிசாமி!

மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் விஜயகாந்த் மீதான அன்பை நினைவுகூர்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
01:52 PM Aug 25, 2025 IST | Web Editor
மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் விஜயகாந்த் மீதான அன்பை நினைவுகூர்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement

மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரை உலகினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து விஜயகாந்தின் நினைவுகள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை,

எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர், தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர்,

மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
actorADMKBirthdaycaptainedappadi palaniswamiEPSPoliticianVijayakanth
Advertisement
Next Article