’’தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை’’- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிமக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் பகுதியில் மக்களை சந்திந்தார். அப்போது பேசிய அவர்,
“ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது சீர்குலைந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு காவல்துறை அதிகாரியே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாகிக்கு உள்ள நிலையில், மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது என்பது தெரியவில்லை. அதேபோல், கோவையில் ஒரு உதவி ஆய்வாளர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவங்களைப் பார்த்தாலே இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கின்றது என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவி வருகிறது. இந்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதல் காரணம் தமிழகத்தில் புழங்கி வரும் போதை பொருள் பழக்கம் தான். இந்த போதைப்பொருள் பழக்கம் வளர்வதற்கு முக்கிய காரணம் திராவிட மாடல் அரசு தான். தற்போதைய முதல்வர் திறமை இல்லாத முதல்வராக இருக்கின்ற காரணத்தினால் தமிழக காவல்துறை செயல் இழந்து காணப்படுகிறது. ஸ்காட்லாந்து போலீசிற்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறையினர் தற்போது செயல் இழந்து காணப்படுவதற்கு காரணம் அரசியல் தலையீடு. 31 ஆண்டுகால அதிமுக அரசின் வரலாற்றில் ஜாதி சண்டை, மதச்சண்டை நடைபெறவில்லை. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். இதனை சிறுபான்மையின மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்”
என்று தெரிவித்தார்.