Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“38 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றாலும் வேலூர் தொகுதியில் நான் தான் ஜெயிப்பேன்” - மன்சூர் அலிகான் பேட்டி!

04:41 PM Mar 29, 2024 IST | Web Editor
Advertisement

“38 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றாலும் வேலூர் தொகுதியில் நான் தான் ஜெயிப்பேன்” என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள மசூதியில் நடிகர் மன்சூர் அலிகான் தொழுகை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி இருப்பதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்த மன்சூர் அலிகான்,

“இதைவிட ஒரு பெரிய ஜோக் இல்லை. இந்தியா முன்னேறிவிட்டதுப்பா. எல்லாரும் சிரிங்கப்பா. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஜோக் இதுதான். எப்படி இப்படியெல்லாம் அண்ணாமலை பேசுறார். அவர் அதற்கு தான் ஐபிஎஸ் படிச்சிருக்கிறாரா. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். கொடுக்கவில்லை. அதானி அம்பானி பொருளாதாரம் தான் முன்னேறி உள்ளது. இங்கு மக்கள் எல்லாம் வேலை வாய்ப்பு இல்லாமல் பிச்சைக்காரர்களாக உள்ளார்கள். நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது.

பொருளாதாரம் பற்றி அண்ணாமலைக்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். மக்கள் முன்
பேச தயார். யார் சொல்வதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது என்று பார்ப்போம். நாடகத் தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தான் நான் வந்துள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியையும், பிரயங்கா காந்தியையும் முன்மொழிகிறேன். தமிழ்நாட்டில் 38 இடங்களில் இந்தியா கூட்டணி ஜெயித்தாலும் இந்த தொகுதியில் நான் தான் ஜெயிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

Tags :
actorAnnamalaiBJPElection2024IndiaMansoor AliKhanParlimentary Election
Advertisement
Next Article