புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை - அதிமுக மாநில செயலாளர் வேதனை!
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய
அவர், "புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் அதிகார மோதலினால் பல துறைகளில் பல
மாதங்களாக துறை இயக்குநர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளுக்கு அனுமதி கிடைக்காமல் கோப்புகள் கிடப்பில்
போடப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "அரசு துறைகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலத்தோடு நிரப்பப்படாமல் உள்ளது. ஆட்சியாளர்களின் மோதல் போக்கினால் எவ்வித நடவடிக்கையும் யார் மீதும் எடுக்க முடியாத நிலை உள்ளதை சில அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும், மக்கள் பணிகளை செய்ய முதலமைச்சர்
உத்தரவிட்டாலும் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சை கேட்பதில்லை" என்று வேதனை தெரிவித்தார்.