Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இன்னும் கால் நூற்றாண்டுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி தொடரும்” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வெற்றிப் பாதையாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
12:37 PM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாணிகுளம் பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 400 பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் அப்பகுதி சிறுவர்களுடன் உறி அடித்தும், சிலம்பம் சுழற்றியும் பொங்கல் விழாவினை கொண்டாடினார். தொடர்ந்து சிலம்பம் சுழற்றிய சிறுவர், சிறுமிகளுக்கு ரொக்கமாக பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடரும். நடைபெறுகிற குற்றச்சம்பவங்களை தடுப்பது ஒருபுறம், நடந்து முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் என இந்த ஆட்சியை பொருத்தவரை இன்னார், இனியவர் என பாகுபாடின்றி முதலமைச்சர் ஆட்சி நடத்துகிறார்.

2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐஐடி மாணவி பாலியல் சம்பவத்தில் உரிய குற்றவாளியை கைது செய்து கடுமையான பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையை முழுமையான அளவில் முடுக்கப்படுவதோடு, குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதன் மீது உரிய நடவடிக்கையை 24 மணி நேரத்தில் எடுக்கிற ஒரு ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை ‘யானை வர பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பதை போல 2026 சட்டமன்ற தேர்தலுக்கு காட்டுகின்ற ஒரு வெற்றிப் பாதையாக, வெற்றிக்கு உண்டான அறிகுறியாக, வெற்றிக்கான விருட்சமாக இருக்கும் என்று நம்புகிறோம். முதலமைச்சரின் சீறிய திட்டங்களால் இதுவரை பெற்றிடாத, பெருவாரியான, எதிர்பாராத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பரிசளிக்க தேர்தல் நாளை எதிர்நோக்கி ஈரோடு வாக்காளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேட்பாளரோடு சேர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் இணைந்து தான் இந்த வேட்பாளரை தேர்வு செய்து ஆதரித்திருக்கிறார்கள். கூட்டணி கட்சியை மதிக்கின்ற ஒரு தலைவர் நாட்டிலே உண்டு என்றால் அது தமிழ்நாடு முதலமைச்சர் தான். கூட்டணி கட்சியினர் குறைகளை சொன்னாலும் கூட அதை நிவர்த்தி செய்து அதன் பிறகு அவர்களை அழைத்து குற்றத்தின் பின்னணி, குற்றத்தின் விளக்கத்தையும் கூறி, அசைக்க முடியாத இரு கரங்களாக கைகோர்த்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது திமுக கூட்டணி" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
2026assembly electionsby electionErodeMinisterPressMeetShekarbabu
Advertisement
Next Article