#Amaran | ராஜபாளையம் அருகே 5 கிராமங்களை சேர்ந்த 500 நபர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கிய படக்குழு!
ராஜபாளையத்தை சுற்றியுள்ள 5 ராணுவ கிராமங்களை சேர்ந்த 500 நபர்களுக்கு 'அமரன்'
திரைப்படம் பார்ப்பதற்கான இலவச டிக்கெட்டுகளை படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சுற்றி உள்ள பெருமாள் தேவன் பட்டி,
சொக்கலிங்கபுரம், மீனாட்சிபுரம், துலுக்கன்குளம் மற்றும் கலங்காபெரி ஆகிய ஐந்து
கிராமங்களில் வசிக்கும் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி
வருகின்றனர். போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் 'அமரன்' திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் ராஜபாளையத்தில் உள்ள பிரபலமான இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இலவசமாக பார்ப்பதற்காக ராணுவ கிராமங்களில் உள்ள 500 நபர்களுக்கு படக் குழுவினர் இலவச டிக்கெட்டுகளை வழங்கி உள்ளனர்.
இதையும் படியுங்கள் : வார விடுமுறை – சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம்!
இலவச டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டவர்கள் இன்று காலை 10 மணி காட்சியை
ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். முன்னதாக திரையரங்கு வளாகத்தில் வீர மரணம்
அடைந்த மேஜர் முகந்த் வரதராஜனின் படத்திற்கு முன்னால் ராணுவ கிராமங்களை
சேர்ந்தவர்கள் ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். மேலும் அமரன் பட
தயாரிப்பு குழுவுக்கு நன்றி தெரிவித்து பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.