For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

04:42 PM Dec 28, 2023 IST | Web Editor
விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
Advertisement

தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்கட்சித்தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை  உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இதனை அடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.  பின்னர் நாளை மாலை இறுதி மரியாதை நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  தமிழகம் முழுவதுமிலிருந்து அவரது ரசிகர்கள்,  தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதே போன்று திரையுலக பிரபலங்கள்,  அரசியல் கட்சித்தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  இந்நிலையில், விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அலையலையாய் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலில் செலுத்தினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளித்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை பிரிந்து வாடும் அவருடைய குடும்பம் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.  மறைந்த விஜயகாந்த் சிறந்த பண்பாளர் மற்றும் சிறந்த நடிகர்.  அரசியலில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர்.  2005 மாநாடு நடத்தி அதில் வெற்றி பெற்று அரசியல் கட்சியாக அறிவித்தார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags :
Advertisement