“திருடாதன்னு சொன்னா திருடனுக்கு வலிக்குது” - பிரகாஷ்ராஜ் பேச்சு!
திருடாதன்னு சொன்னா திருடனுக்கு வலிக்குது என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று வெளியிட்டார்.
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கம்பீரமாக மேடையில் பேச பயமா இருக்கிறது. ஏனென்றால் எனது குரல் அரசியல் குரல்
இல்லை கலைஞனின் குரல். அப்படி பேசினால் அரசியல் ஆகிவிடுகிறது. கலைஞர் இருந்தவரை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். நமக்காகப் பேச ஒருத்தர் இருந்தார், அப்பேர்ப்பட்ட குரலுடைய தொடர்ச்சி தான் சிவா.
ஒருவர் சொன்னார் ரொம்ப தைரியமா பேசுகிறீர்கள் என்று. உண்மையை சொல்கிறதுக்குத்
தைரியம் தேவையில்லை. பொய் சொல்றது தானே தைரியம் இருக்கவேண்டும். என்னுடைய மொழியை வந்து திருடாதே, என்னுடைய அடையாளமான என்னுடைய தனித்துவத்தைத் திருடாதே, என்னை காத்துட்டு இருக்கிற என் மானிடத்தைத் திருடாதே என்றால் அந்த திருடனுக்கு வலிக்கிறது. வலிக்கட்டும் பரவால்ல. அப்பேர்ப்பட்ட குரல்களோடு இங்க
வருவதும் இந்த நிகழ்ச்சியில் நான் நிற்கிறதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.