போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார் இபிஎஸ்!
11:38 AM Mar 10, 2024 IST
|
Web Editor
Advertisement
போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று இபிஎஸ் சந்தித்தார்.
Advertisement
சென்னையில் கடந்த 8ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த அவர், போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11:30 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் குறித்தும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக், ஜாபர் சாதிக்குக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் முழுமையான சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் மனு அளித்துள்ளார்.
Next Article