For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திராவிட மாடல் ஆட்சியை குறைசொல்லும் உரிமை #EPSக்கு இல்லை” - திமுக எம்எல்ஏ பரந்தாமன்!

12:04 PM Oct 14, 2024 IST | Web Editor
திராவிட மாடல் ஆட்சியை குறைசொல்லும் உரிமை  epsக்கு இல்லை”   திமுக எம்எல்ஏ பரந்தாமன்
Advertisement

திராவிட மாடல் ஆட்சியை குறைசொல்லும் உரிமை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என சென்னை எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலத் திட்டங்களைத் திமுக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தனது ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத எடப்பாடி பழனிசாமி திராவிட மாடல் ஆட்சியை குறைசொல்ல எந்த உரிமையும் இல்லை என எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாதவர், இன்று தோள்தட்டி குரல்கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முழுமையாக அந்த மக்களிடம் சென்றடையும் வகையில், அவற்றை கண்காணிக்க Tamil Nadu SC & ST Development Action Plan Act 2023 என்னும் ஒரு சிறப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு அளவில் ஒரு குழு, மற்றும் மாவட்ட அளவில் ஒரு குழு என சட்டப்படி அமைத்து இதில் தன்னார்வலர்களையும் இணைத்து திட்டங்களை கண்காணித்து வரும் நடவடிக்கை ஒன்றே இந்த ஆட்சியின் உச்சபட்ச நடவடிக்கை என்பதை பழனிசாமி அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தை தனது ஆட்சியில் கூட்டாத பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் தலைமையில் 6 மாதத்திற்கு ஒருமுறை நடத்தும் எங்களை பார்த்து விரல் நீட்டும் உரிமை கொஞ்சமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். வாக்கு அரசியலுக்கு வாய் பிளக்காதீர், நீங்கள் வழுக்கிவிழுந்து பல காலமானது” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement