நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்!
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08:17 PM Apr 12, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், மாநில எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;
Advertisement
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றுள்ள புதிய பொறுப்பில் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Next Article