For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“EVM குறித்த வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” - ராகுல் காந்தி எம்.பி.!

05:06 PM Jun 17, 2024 IST | Web Editor
“evm குறித்த வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்”   ராகுல் காந்தி எம் பி
Advertisement

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெளிப்படைத் தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Advertisement

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும் என எலான் மஸ்க் கருத்து பதிவிட்டதிலிருந்தே, உலக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் EVM ஒரு கருப்புப் பெட்டி எனத் தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு முன்னரே வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் EVM குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“நாட்டில் ஜனநாயக துறைகள் கைப்பற்றப்படும்போது, வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது தற்போது ஒரு கருப்புப் பெட்டியாக உள்ளது. தேர்தல் ஆணையம், அந்த இயந்திரங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement