For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்க்கிட்டு இருக்கு’... இந்தியர்களுக்காக புதிய அம்சங்களை வாரி வழங்கிய #Google!

04:24 PM Oct 04, 2024 IST | Web Editor
‘போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்க்கிட்டு இருக்கு’    இந்தியர்களுக்காக புதிய அம்சங்களை வாரி வழங்கிய  google
Advertisement

இந்தியாவில் தனது சேவைகளை மேலும் மேம்படுத்த பல புதிய அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisement

இந்திய சந்தையில் தனது சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கூகுள் சில முக்கியமான அப்டேட்களை அறிவித்துள்ளது. ஜெமினி லைவ்-இல் பல இந்திய மொழிகள் சேர்ப்பு, கூகுள் பேயில் தங்கக் கடன் அறிமுகம் மற்றும் கூகுள் லென்ஸில் புதிய வீடியோ அறிதல் அம்சம் ஆகியவை அறிமுகப்படுத்த உள்ளதாக ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெமினி லைவ்

கூகுளின் செயற்கை குரல் நுண்ணறிவு செயலியான ஜெமினி லைவ், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்கும் திறன் கொண்டது. இந்தச் செயலி தற்போது ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள நிலையில், விரைவில் ஹிந்தி மொழியில் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், மராத்தி மற்றும் உருது மொழிகளிலும் ஜெமினி லைவ் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் லென்ஸ்

நமக்கு தெரியாத பொருட்களை, இடங்களை, படங்களை அடையாளம் கண்டு, அவற்றை குறித்த தகவல்களை அறிவதற்காக நாம் பயன்படுத்ததும் ஒரு இணைய கருவிதான் கூகுள் லென்ஸ். புகைப்படங்களை வைத்து தேடல்களை மேற்கொண்ட நிலையில், இப்போது வீடியோ மற்றும் குரல் பதிவு மூலம் தேடல்களை மேற்கொள்ள கூகுள் லென்ஸ் அனுமதிக்கிறது.

கூகுள் லென்ஸ் அம்சத்தை பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய பயனர்கள்தான் அதிகளவில் பயன்படுத்துவதாகவும், மாதந்தோறும் கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகிப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் பே

உங்கள் வீட்டில் தங்கம் இருந்தால், Google Payயில் ரூ.50 லட்சம் வரை தங்கக் கடன் பெறலாம். இதனுடன் கூகுள் பே மூலம் கிடைக்கும் தனிநபர் கடனுக்கான வரம்பு 5  லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூகுள் பே இப்போது முத்தூட் ஃபைனான்ஸ் உடன் இணைந்து தங்கத்துடன் கூடிய பாதுகாப்பான கடன்களையும் வழங்கும். இருப்பினும், கடன் செயல்முறை என்னவாக இருக்கும் மற்றும் அது எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றிய தகவலை கூகுள் இன்னும் வெளியிடவில்லை.

இது தவிர, UPI Circle அம்சத்தை Google Pay அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் கீழ், பணம் செலுத்தும் பயனர் தனது UPI கணக்கிலிருந்து மற்றொரு நபருக்கு தேவையான வரம்புடன் பரிவர்த்தனைகளை அனுமதிக்க முடியும்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் இப்போது இந்தியாவில் அதன் ஆப்பில் நிகழ்நேர வானிலை அப்டேட்களை வழங்க முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் சாலைகளில் மூடுபனி மற்றும் வெள்ளம் பற்றிய விழிப்பூட்டல்களைப் பதிவிடவும், பெறவும் முடியும்.

மழைக்காலத்தில் பயணம் செய்பவர்கள் பள்ளங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்த்து உரிய நேரத்தில் தங்கள் இலக்கை அடைய முடியும் என்பதால் இது ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த தரவு அவர்கள் Google Maps பயன்பாட்டிற்கு வழங்கும் பயனர் கருத்துகளின் அடிப்படையில் இருக்கும்.

Tags :
Advertisement