எண்ணூர் எண்ணெய் கசிவு | பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!
எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், படகுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : வெளியானது “டிமாண்டி காலணி 2” படத்தின் டிரைலர்!
இந்நிலையில் எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதித்த 22 மீனவ கிராமங்களில் 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 700 படகுகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என்றும் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்றும் சிறப்பு அதிகாரி கந்தசாமி ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.