For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ENGvsAUS - மழையால் 43 ஓவர்களாக குறைப்பு... நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி!

09:16 PM Sep 27, 2024 IST | Web Editor
 engvsaus   மழையால் 43 ஓவர்களாக குறைப்பு    நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி
Advertisement

ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மழையால் தாமதமானதால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து 1 வெற்றியும் பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று 5 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் 90 நிமிடங்கள் டாஸ் போட தாமதமானது. இதனால் 50 ஓவர்கள் கொண்ட போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 18வது ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை குவித்துள்ளது இங்கிலாந்து அணி. முதலில் இறங்கிய வில் ஜாக்ஸ், பில் சால்ட் இணை 10, 22 ரன்களில் வெளியேறினர். தொடர்ந்து பென் டக்கெட், ஹாரி ப்ரூக் இணை விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

Tags :
Advertisement