Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆங்கிலம் அணை கிடையாது, அது ஒரு பாலம் - அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!

ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
03:48 PM Jun 20, 2025 IST | Web Editor
ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Advertisement

டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, "இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தைகய சமூகம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம்முடைய நாட்டின் மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்தநிலையில், ஆங்கிலம் குறித்து அமித் ஷா பேசிய கருத்திற்கு ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

"இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பிஜேபி- ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால, கேள்வி கேட்பது, முன்னோக்கிச் செல்வது, சமநிலை அடைவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆங்கிலம் அணை கிடையாது. அது ஒரு பாலம். ஆங்கிலம் அவமானம் அல்ல. அது அதிகாரமளிப்பது. ஆங்கிலம் சங்கிலி அல்ல. சங்கிலியை உடைக்கும் கருவி. இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாசாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடுவதற்கான பாதை அதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை வழங்கும்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
amit shahCongressDelhiEnglishlanguageRahul gandhi
Advertisement
Next Article