#ENGvsAUS | ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 310 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 4போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து 2 வெற்றியும் பெற்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிஸ்டாலில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 27 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பின்னர், களமிறங்கிய வில் ஜாக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பென் டக்கெட்டுடன் கேப்டன் ஹாரி ப்ரூக் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.'
இதையும் படியுங்கள் : “#PMModi -ஐ அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை சாகமாட்டேன்” – மல்லிகார்ஜுன் கார்கே!
அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் அடித்து அசத்தினார். அவர் 91 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்தடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் (6 ரன்கள்), லியம் லிவிங்ஸ்டன் (0 ரன்), ஜேக்கோப் பெத்தெல் (13 ரன்கள்), பிரைடான் கார்ஸ் (9 ரன்கள்), அடில் ரஷீத் (36 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 309 ரன்களை சேர்த்தனர்.
இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைகுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று தொடரை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.