Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினுக்கு எதிரான அமலாகத்துறையின் மேல்முறையீட்டு வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

07:10 PM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினுக்கு எதிராக அமலாகத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (ஜூன் 25) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Advertisement

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி ஜாமீன் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து கடந்த 21-ம் தேதி வெளியேறுவதாக இருந்த நிலையில், இந்த திடீர் உத்தரவு வந்தது. கடந்த 20-ம் தேதி விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை 48 மணிநேரம் அவகாசம் கேட்டிருந்தது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலை ஜாமினில் விட எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது.

மதுபான கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (ஜூன் 23) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரவிந்த கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார். உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் என்று கூறி, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஜூன் 26) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (ஜூன் 25) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Tags :
Arvind KejriwalDelhi highcourtjustice manoj misraNews7Tamilnews7TamilUpdatesSupreme court
Advertisement
Next Article