Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அமலாக்கத் துறை சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகுபவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்!” - உச்சநீதிமன்றம்!

07:50 PM May 16, 2024 IST | Web Editor
Advertisement

அமலாக்கத் துறை அனுப்பும் நோட்டீஸை ஏற்று, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஆஜராகும்போது அவரை கைது செய்வதென்றால், சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

ஒரு பணமோசடி தடுப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, அமலாக்கத் துறை மற்றும் அதன் அதிகாரிகள் பணமோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 19-ன் கீழ் ஒருவரை கைது செய்வதற்கான அதிகாரத்தை இழந்துவிடுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

"ஒரு தனிநபருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுவிட்டால், அவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை விசாரணை அமைப்பு பெற வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபைய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் பயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. விசாரணையில், கைது நடவடிக்கை அவசியம் என்று நீதிமன்றம் கருதினால் மட்டுமே கைதுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

முதற்கட்டமாக, சட்டப்பிரிவு 70ன் கீழ், சம்மனுக்கு, குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜராக மறுக்கும்பட்சத்தில்தான் கைதுக்கு அனுமதிக்க முடியும். அதுவும் பிணையுடன் கூடிய கைது ஆணையாகவே இருக்க முடியும்.

பணமோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 19-ன் படி, ஒருவரது இருப்பிடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகள், எழுத்துப் பூர்வமாகக் கிடைத்த நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளி என தெரியவந்தால் அது அவரது கைதுக்கு வழிவகுக்கும். அதுபோல விசாரணை அமைப்பு, கைதுசெய்யப்படுவது குறித்து உடனுக்குடன் அந்த நபருக்குத் தெரியப்படுத்த வேண்டியது கைது செய்வதற்கான அடிப்படைப் பணியாகும்.

ஒரு புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படும்வரை, குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை என்றால், வழக்குப் பதிவு செய்யப்பட்டபிறகு அவரை கைது செய்யக்கூடாது. ஒருவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி, அவரும் மிகச் சரியான விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானால், அது காவலில் எடுப்பதாகாது.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு எந்த விதிவிலக்கும் இல்லாமல் எழுத்துப்பூர்வமாக, கைது செய்யப்படுவதற்கான காரணங்களை அமலாக்கத் துறை வழங்க வேண்டும். என்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags :
ArrestEnforcement DirectoratesummonSupreme court
Advertisement
Next Article