இமானுவேல் சேகரன் நினைவு தினம் - மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளை அடைக்க மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பாதுகாக்கும் பொருட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள்,
மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.