யூடியூப்-க்கு போட்டியாக எலான் மஸ்க்கின் புதிய வீடியோ செயலி!
09:35 AM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement
எலான் மஸ்க் யூடியூப் வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மிகப்பிரபலமான செயலியான எக்ஸ் தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு அங்கமாக, புதிய வீடியோ செயலியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முன்னணி வீடியோ தேடல் மற்றும் பார்வை தளமாக யூடியூப் விளங்கி வருகிறது. எலான் மஸ்கின் இந்த அதிரடி கூகுளின் முக்கிய அங்கமான யூடியூபின் சந்தையை பாதிக்கக்கூடும்.
எக்ஸ் தளத்தை லாபகரமாக மாற்றும் முயற்சியில், 3 மணி நேர முழு திரைப்பட நீளத்திலான வீடியோக்களையும் அதில் பதிவிட எலான் மஸ்க் வசதிகள் செய்துள்ளார். பின்னர் எக்ஸ் பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மேற்படி வீடியோக்களை ஸ்மார்ட் டிவிக்களில் காண ஏதுவாக வீடியோ செயலி ஒன்றையும் எலான் மஸ்க் வெளியிட இருக்கிறார்.
இந்த வீடியோ செயலி ஒப்பீட்டளவில் நடப்பிலிருக்கும் யூடியூப்க்கு இணையான வசதிகளை கொண்டிருக்கும். முதற்கட்டமாக அமேசான் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் எலான் மஸ்கின் வீடியோ செயலியை பெற இருக்கின்றன. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த வசதிக்காக, மாகாணங்கள் தோறும் வங்கிகள் வாயிலாக எக்ஸ் தளத்துக்கான அனுமதி பெறும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.