டெஸ்லா காரின் பிரச்னையை சுட்டிக்காட்டிய சிறுமி! - பதிலளித்த எலான் மஸ்க்!
டெஸ்லா காரில் உள்ள பிரச்னை இருப்பதாக கூறி வீடியோ பதிவு வாயிலாக புகார் அளித்த சிறுமியின் பதிவிற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் முன்னிலையில் உள்ளது. சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார்.
இதை பற்றி டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். தன்னுடைய செயலை ஒரு வீடியோ பதிவாக எடுத்து, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் பயனர் ஐடியை மேற்கோள் காட்டி, வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : திண்டுக்கலில் ஐடி அதிகாரி எனக் கூறி பண மோசடி: கார் ஓட்டுநர் கைது!
அந்த வீடியோவில் சிறுமி தெரிவித்திருப்பதாவது, "நான் சீனாவைச் சேர்ந்த மோலி. உங்கள் டெஸ்லா காரில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. நான் ஒரு படத்தை வரையும்போது, முன்னர் வரைந்த படம் அழிந்து விடுகிறது. இதனை சரிசெய்ய முடியுமா? நன்றி" என்று கூறியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் "நிச்சயமாக"...என்று சிறுமியின் விடியோவில் மறுபதிவிட்டுள்ளார். சிறுமியின் இந்த விடியோவானது, இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிறுமியின் விடியோவிற்கு பாராட்டு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Molly decided to report an important bug to Mr. Musk @elonmusk #Tesla $tsla pic.twitter.com/LgqFEPh7qw
— DriveGreenLiveGreen (@DriveGreen80167) June 30, 2024