Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் - கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!

12:55 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

குன்னூர் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால்,  பள்ளியை சேதப்படுத்திய யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள்
கூட்டம் முகாமிட்டுள்ளன.  இந்த யானைகள் அவ்வப்போது தேயிலைத் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுகளில் உலா வந்த வண்ணம் இருந்தன.  இந்த நிலையில்,  இன்று (ஜன.08) அதிகாலை குன்னூர் நான்சச் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியின் கதவை உடைத்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்தன.

 

இதையும் படியுங்கள்:  தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

மேலும் சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன.  பின்னர் அங்குள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை உட்கொண்டு அருகில் உள்ள தலைமையாசிரியர் அலுவலகத்தை சேதப்படுத்தி உள்ளன.   மேலும் அருகில் உள்ள பூந்தொட்டிகள், மரம், செடிகளையும் சேதப்படுத்தி உள்ளன.

 

இதனைத் தொடர்ந்து மக்கள் திரண்டு கூச்சலிட்டதால்,  யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன.  சேதமான பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.  மேலும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் யானைகளை விரட்டும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags :
#damagedcoonoorElephantsHeavy Snow fallnews7 tamilNews7 Tamil UpdatesNilgirisSchoolsnow fall
Advertisement
Next Article