For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘குப்பையிலிருந்து மின்சாரம்’ - கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலை திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
03:29 PM May 27, 2025 IST | Web Editor
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலை திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
‘குப்பையிலிருந்து மின்சாரம்’   கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன
Advertisement

சென்னை மாநகராட்சியானது ‘ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்’ என்ற பெயரில் தனியார் பங்களிப்புடன் கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ‘குப்பை எரிவுலைகளை’ கொடுங்கையூர் பகுதியில் நிறுவத் திட்டமிட்டுள்ளது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், திருவொற்றியூர் முதல் அண்ணா நகர் வரையிலான எட்டு பிரிவுகளின் எல்லா திடக்கழிவுகளையும், தென் சென்னை உள்ளடக்கிய ஏழு பிரிவுகளின் மட்காத கழிவுகளையும் எரித்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது

Advertisement

இந்தத் திட்டத்தின் மூலமாக வடசென்னையில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளில் தோராயமாக 500 மெட்ரிக் டன்கள் நெகிழி உள்ளிட்ட 2,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் எரித்து அழிக்கப்பட உள்ளன. திடக்கழிவுகளில் கலந்திருக்கும் அதிக எரிதிறன் கொண்ட நெகிழி, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்தை பயன்படுத்தி, பாய்லரில் இருக்கும் நீரைக் கொதிக்கச் செய்து நீராவியாக்கி, அந்த எரிசக்தியை மின்சாரமாக மாற்றுவதையே கழிவிலிருந்து மின்சாரம் தயாரிப்பு என்கிறார்கள்.

இத்திட்டம் அறிவியல் ரீதியாக நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இதனால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் குப்பை எரிவுலைகளில் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் கூட டயாக்சின்கள், பியூரான்கள் உள்ளிட்ட மிகமோசமான பல்வேறு நச்சு வாயுக்கள் இதிலிருந்து வெளியேறுகின்றன.

நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய நச்சான பாதரசம், புத்திக்கூர்மையை பாதித்து நடத்தைகளைப் பாதிக்கும். ஆக்சைடு போன்றவை குப்பை எரிவுலைகளிலி ருந்து வெளியேறுவதால் கண், மூக்கு, தொண்டை பகுதிகளில் எரிச்சலை உருவாக்கி சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும். இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பாக இருக்கக்கூடிய எரி உலையினால் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் சளி இருமல் தோல் நோய் , சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு நோய் தொற்றுகள் பரவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவை மட்டுமின்றி, குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ரெட்டேரி, புழலேரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் கலப்பதோடு, வீடுகளிலும் அருகாமை உணவகங்களிலும் தயாராகும் உணவுப் பொருட்களையும் கூட மாசுபடுத்தக் கூடியவையாகும். தரையில் படியும் நச்சுக்களும் மழைநீரோடு கலந்து நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குப்பை எரிவுலைகள் எல்லா குப்பைகளையும் எரித்து அழித்து விடுபவைபோலத்
தெரிந்தாலும், அதிக நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை அதிகமாக உருவாக்குகின்றன. கொடுங்கையூர் குப்பை எரிவுலையில் 2,000 மெட்ரிக் டன்கள் குப்பையை எரிப்பதன் மூலம் சுமார் 3,400 மெட்ரிக் டன் கார்பனை ஒவ்வொரு நாளும் உமிழும் அபாயம் உள்ளது. இது 10 லட்சம் கார்களின் உமிழ்வுக்கு சமமாகும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையும் கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டமானது மிக அதிகக் கார்பன் உமிழ்வை உருவாக்குவது என்று குறிப்பிடுகிறது. ஒரு சராசரியான நிலக்கரி மின்னிலையத்தை விட குப்பை எரிவுலையானது 65 விழுக்காடு அதிக கார்பன் உமிழ்வுக்குக் காரணமாக இருக்கிறது.

ஆனால், கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சூழலில், அதற்கு ஒவ்வொரு நாளும் நல்ல எரிதிறன் கொண்ட நெகிழி உள்ளிட்டக் கழிவுப் பொருட்கள் கிடைப்பது அவசியமாகிறது. ஆகவே இது ஒட்டுமொத்த குப்பை மேலாண்மையையும் சிதைத்து குப்பைகளின் அளவை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.

Tags :
Advertisement