For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெருங்கும் தேர்தல் முடிவுகள் - புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!

04:13 PM May 27, 2024 IST | Web Editor
நெருங்கும் தேர்தல் முடிவுகள்   புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்
Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சம் தொட்டன.

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.

Advertisement

இதனையடுத்து ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ன் தேதி நடைபெற்றது. இதில், பீகார் (8), ஜார்க்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றன.  6ம் கட்ட தேர்தலில் 59.06% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FPIs) வரத்து அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் டெல்லி தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி திங்கள்கிழமையான இன்று இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75,655.46 என்ற இதுவரை இல்லாத உயர்வில் இன்று காலை வர்த்தகத்தை தொடங்கியது.  அதே போல் நிஃப்டி 23,038.95 புள்ளிகளில்  வர்த்தகத்தை தொடங்கியது.

வர்த்தம் தொடங்கியது முதல் நிறைவடையும் வரை இந்திய பங்குச்சந்தைகள் தொடர் உச்சத்தில் இருந்தன.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 75 புள்ளிகள் அதிகரித்து 75,426 ஆகவும்,  தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 23,060 ஆகவும் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் முடிவில் சிறிது சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை வர்த்தகம் வர்த்தக நேர நிறைவில்,  மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 19 புள்ளிகள் குறைந்து 75,390 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 24 புள்ளிகள் குறைந்து 22932 ஆகவும் இருந்தது.

Tags :
Advertisement